தமிழ்நாடு

டெல்லியில் திமுக கொடி : 2024 தேர்தலில் 40க்கு 40 வெற்றி - பிறந்தநாள் விழாவில் லியோனி பேச்சு

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் பிறந்தநாள் விழா - தங்கம் தென்னரசு தலைமை

விருதுநகர் , காரியாபட்டியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி.

நீதி கட்சி - திராவிடமாடல் 

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு இலவசமான பாதுகாப்பான பயணம் மட்டுமல்ல கல்வி கொடுத்தவர் நமது தமிழக முதல்வர், பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதி கட்சி, பெண்களுக்கு சொத்துரிமையை கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி, இல்லம் தேடிக் கல்வியை கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி, மக்களைத் தேடி மருத்துவத்தை கொடுத்தது நமது திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கு வரப்போகின்ற நாட்களில் மகளிர் உரிமை தொகையை கொடுக்கக்கூடிய ஆட்சியும் நமது திராவிட மாடல் ஆட்சி.

பழைய பாடல்களில் பெண்களை வர்ணிக்காத பாடல் வரிகளை கிடையாது.

மோடி ஆட்சியில்  - ஜிடிபி உயர்வு

நமது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிடிபியே  உயர்த்துங்கள் தனிமனிதர் வருமானத்தை உயர்த்துங்கள் என்றார். நரேந்திர மோடி அவர் சொல்வதை எல்லாம் கேட்டுட்டு கரெக்டா GDP மூன்றையும் உயர்த்தி விட்டார். அது என்னா GDP , G- கேஸ், D-டீசல், P -பெட்ரோல் நிதியமைச்சர் தனிமனிதர் வருமானத்தை உயர்த்தி சொன்னால் இந்த ஜிடிபி உயர்திட்டு வராங்க.

செல்லாத நோட்டு:

அதிமுகவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் 7 ரூபாய் நோட்டும், 15 ரூபாய் நோட்டும் தான்  இபிஎஸ், ஓபிஎஸ், இந்தியாவிலேயே செல்லாத நோட்டு இவர்கள்தான்.

பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ணுவது பிஜேபி.

பிஜேபியை அடிச்சுக்கிறதுக்கு ஆளே கிடையாது. ஒரு பத்து வருஷத்துல பிள்ளையாகவே பால் குடிக்க வைத்தவர்கள். பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ணுவது பிஜேபி. பிள்ளையாரை ஊர்வலமாக அழைத்துச் சென்று அரசியல் செய்வது பாரதிய ஜனதா, அதே விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வழிபடுங்கள் என்று செய்வது திராவிட மாடல் ஆட்சி. 

டெல்லியில் திமுக கொடி பறக்குது என்றால் வருகின்ற 2024 தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று எங்கள் தலைவர் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராக வருவார்.