தமிழ்நாடு

" DMK FILES பார்ட் 2 கோவையில் வெளியிடப்படும்...! " - அண்ணாமலை கொடுத்த அப்டேட்....!

Malaimurasu Seithigal TV

DMK FILES பார்ட் 2 கோவையில் வெளியிடப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா்.

 இதுகுறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், 

" DMK files எவ்வளவு நீட்டாக உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். அந்த இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் அதில் இருக்கும். என்று தெரிவித்தார்.   
மேலும்,  'என் மண்; என் மக்கள்' என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் பொழுதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம் " என்றும் கூறினார்.

அதோடு,  " DMK FILES 2-ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள் ", என்றும், கஷ்டப்பட்டு ஒவ்வொருவரும் இன்ஜினியர் மருத்துவர் ஆனால் கலைஞரின் பேனா மையில் தான் மருத்துவர் ஆனார் கலைஞரின் பேனா மையில் தான் இன்ஜினியர் ஆனார் என என்று கூறுகிறீர்கள் என்றும்  இன்னொருவர் குழந்தைக்கு பெயர் வைப்பதா ? இது இழிவாக இல்லையா? எனவும்  விமர்சித்துள்ளார்.  

அதனைத்தொடர்ந்து,  கலைஞரின் குடும்பத்தில் பிறந்தவர்கள் எத்தனை பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனார்கள்? எனவும் கேள்வி எழுப்பியவர், திமுகவின் அரசியலே வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என உள்ளது என்று குற்றம் சாட்டினார். 

மேலும், தற்பொழுது உள்ள தமிழர்கள்  ஐ.ஏ.எஸ்.அல்லது,   ஐபிஎஸ் ஆகவில்லை என்றால் எப்படி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வார்கள் ? எனக் கேள்வி எழுப்பியவர்,  கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் -ஐ பூதக்கண்ணாடியை கொண்டு தேடும் நிலைமையாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் பத்துக்கு ஒன்பது பேர் வட இந்திய அதிகாரிகளாக இருப்பார்கள் என்றும் சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், " பழைய சோறு டாட் காம் விவகாரம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது எனவும், எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி பார்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முற்றுகை இடுவோம் எனவும்,  கோவை மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது. ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75% டாஸ்மாக்கை மூடுவது மற்றும், கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது என அனைத்தையும் நாம் கூறியுள்ளோம். அதை வைத்து ஒரு விவாதம்  நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை ",  என்றும் கூறியுள்ளார்.

அதையடுத்து, " DMK FILES 2 -வை கோவையில் வெளியிடுவோம்",  என்றும்,  தன்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன் எனவும் கூறினார். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது என்றும் கூறினார்.

மேலும்,  ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை பாஜகவினர் மிரட்டியதாக வந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பத்திரிக்கையில் வந்திருக்கக்கூடிய செய்தி தவறானது என்றும்,  இருதரப்பினரின் விளக்கத்தையும்  கேட்க வேண்டும் எனவும் கூறினார். அதோடு, இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உள்ளது என்றும், அதனை கேட்பதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை எனவும் கூறினார். மேலும், அங்கு  நடந்திருக்க கூடிய சம்பவம்  வேறு எனவும்,  அங்கிருந்தவர் ஹிஜாப் பற்றி பேசவில்லை; ஏன் தாமதமாக மருத்துவர்கள் வந்தார்கள் என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார் எனவும்  பிறகு அது அரசியல் சண்டையாக மாறி உள்ளது என்றும் தெரிவித்தார்.