பிரதமர் மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த ஐந்துமுனை பகுதியில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் 27 மாதங்களாக ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் தனது மகன் மற்றும் மருமகனுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க : "ஆளுநரின் பேச்சு திமுகவுக்கு மிகப் பெரிய விளம்பரம்" - மு.க.ஸ்டாலின்
அதனை தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக வருவாய் ஈட்ட நினைக்கும் தமிழ்நாடு அரசு, கள்ளுக்கடையை திறக்க வலியுறுத்தி வரும் பனை விவசாயிகளை கண்டுகொள்வதில்லை என தெரிவித்தார். மேலும் பாஜகவை குறை கூறி வரும் திமுக அரசு, பிரதமர் மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட வர முடியாது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.