தமிழ்நாடு

இலங்கை மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை!

Malaimurasu Seithigal TV

எல்லை தாண்டி கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களிடம் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர்  மற்றும்  எஸ்.பி தலைமையில்  அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். தூத்துக்குடியிலிருந்து 50 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை நீர்கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மார்கஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் ஆகிய 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். 

இவர்களிடம் க்யூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில்  கைது செய்யப்பட்டு   5 மீனவர்கள் இன்று  திருச்செந்தூர் அழைத்துவரப்பட்டனர். திருச்செந்தூர் கோட்டாட்சியர்  அலுவலத்தில் வைத்து இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், க்யூ பிரிவு போலீசார் மத்திய உளவுதுறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடத்த விசாரணைக்கு பிறகு 5 மீனவர்களும் ராமநாதபுரம் அழைத்து செல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.