தமிழ்நாடு

”சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும்...” வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்!! காரணம் என்ன?!

Malaimurasu Seithigal TV

அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைப்பது மூலம் இந்த மாற்றத்தை அரசு தொடங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

தொடரப்பட்ட வழக்கு:

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் பொதுப்பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை அப்புறப்படுத்த வேண்டும் என நில உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில், சாதி ரீதியாக தனித்தனி மயானங்கள் உள்ள நிலையில், பொதுப்பாதையில் புதைக்கக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணை:

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உடலை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். 

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, முத்துசாமி, அன்பழகன் ஆகியோர் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். 

மேல்முறையீடு மனு:

அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுவை விசாரித்த நீதிபதிகள், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் சாதிய கட்டுக்களை உடைத்தெறிய முடியவில்லை என வேதனை தெரிவித்தனா். 

நீதிபதிகளின் வேதனை:

மேலும் சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியார் பாடியுள்ள நிலையில், ஒரு மனிதனின் இறப்பின் போதாவது சமத்துவத்தை தொடங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.

தீர்ப்பு:

அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைப்பது மூலம் இந்த மாற்றத்தை அரசு தொடங்க வேண்டும் என்றும் கருத்துரைத்த நீதிபதிகள்,  உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

மேலும் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.