சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூடியதும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதனையடுத்து, தீர்மானம் மீது பேசிய அவர், நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு மத்திய அரசின் 3 சட்டங்களும் உகந்ததாக இல்லை என கூறியுள்ளார்.
விளை பொருட்களை வாங்கும் தனியார்களுக்கே வேளாண் சட்டங்கள் சாதகமாக உள்ளது என்றும், மாநில விவசாயிகளுக்கு பயனில்லாத அந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் திருத்த சட்டங்களால் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வேளாண்மை சென்று விடும் என குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.