தமிழ்நாடு

உண்மையை சொல்லுங்கள் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டாதீர்கள்.!  கொதித்தெழுந்த எடப்பாடி.! 

Malaimurasu Seithigal TV

இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இறப்பு விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் எடப்பாடி தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளிடம் குறைகளையும் கேட்ட அவர் அங்குள்ள நிலைமை பற்றி மருத்துவர்களிடம் கலந்துரையாடினர். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த "அவர் சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். சேலம்,ஆத்தூர்,ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. எவரேனும் டிஸ்சாரஜ் ஆனால்தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு படுக்கை கிடைக்கிறது" எனக் கூறினார்.  

 மேலும் "உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அரசு போர்க் கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த படுக்கைகள் மட்டுமே தற்போது வரை உள்ளன
எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்ககள் காலியாக உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சேலம் மாவட்ட முழுக்க கோவிட் 3800 படுக்கைள் உள்ள நிலையில் உள்ள நிலையில் 11700 என தவறான எண்ணிக்கையை கொடுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் "தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 267 பரிசோதனை மையங்கள் மட்டுமே தற்போது வரை உள்ளன. பரிசோதனை மையங்களை அதிகரித்து RTPCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது" அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். 

மேலும், ஆம்புலன்ஸில் காத்திருந்து உயிரிழப்பவர்களை முறையாக உரிய கவர்களை கொண்டு மூடப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சடலங்கள் பல நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டி உள்ள நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு அறிவித்து அதற்கு முன்னர் தளர்வு கொடுத்தால் 6 லட்சம் பேர் நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு வந்துள்ளனர். இவர்களை முறையாக கண்காணிக்கவில்லை" என்றும் குற்றம் சாட்டினார். 

அதோடு "அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.கொரோனாவை வைத்து அதிமுக அரசியல் செய்யவில்லை ஆளும்கட்சி எதிர்கட்சி என்று இல்லாமல் அதிமுக செயல்படுகிறது. எனத் தெரிவித்தார்.