தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவி உயர்வு ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, தற்போது தமிழ்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களின் நலன் கருதி, ’முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பதவி முதல் துணை மேலாளர் பதவி வரை’ பணிபுரியும் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தகுதி வாய்ந்த சுமார் 70 பணியாளர்களுக்கு தொழில்நுட்பர் மற்றும் மேலாளர் வரையிலான பல்வேறு பதவிகளுக்கு பதவி உயர்வு ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.
இதையும் படிக்க : இனி காவல்நிலையங்களில் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீர்...!
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை செயலாளர், ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.