தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு...  தினசரி பாதிப்பு குறையத் தொடங்கியது...

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 597 இல் இருந்து ஆயிரத்து 578 ஆக குறைந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஆயிரத்து 578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 66 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் ஆயிரத்து 607 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 14 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 17 ஆயிரத்து 46 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று 163 பேருக்கும், செங்கல்பட்டு 107 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.