தமிழ்நாடு

தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று...

தஞ்சையிலுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் எதிர்காலம் கருதி நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

முன்னெச்சரிக்கையாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு நாமக்கல்லில் பள்ளி மாணவிகள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தஞ்சையிலுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலர்கள் 928 பேருக்கு 2ஆம் தேதி கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. 

இவர்களில் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடன் வகுப்பறையில் ஒன்றாக இருந்த 30 மாணவிகளும் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த வகுப்பு பேராசிரியைக்கு கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.