திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஆசிரியர்கள் அறிவுறுத்தலின்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, கடந்த திங்கட்கிழமை அன்று அந்த மாணவனுக்கு பரிசோதனை முடிவில் தோற்று இருப்பது உறுதியாகியது.
இதையடுத்து பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் என 231 நபர்களுக்கு மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்த 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் 9 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அந்த பள்ளிக்கு 15, 16 மற்றும் 17.09.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவுவிட்டுள்ளார். ஒரே பள்ளியில் ஒன்பது மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.