தமிழ்நாடு

கொரோனாவுக்கு மாட்டுக்கறி சூப் கொடுங்க.... ஸ்டாலினுக்கு வன்னியரசு வேண்டுகோள்!!

Malaimurasu Seithigal TV

கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு மாற்றுக்கறி சூப் வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு முதல் உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். சில நாடுகளில் அதன் பாதிப்பு அடங்கியபோதும், இன்னும் ஊரடங்கு நடைமுறையிலிருந்து மக்கள் முழுவதுமாக விடுவிக்கப்படவில்லை. 

இந்தியாவிலும் இந்த அலை பரவிய நிலையில், இந்த ஆண்டு அதன் 2வது அலை கோர முகத்தை காட்டிவிட்டது. இதனால் பலரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்திலும் இந்த தொற்றுக்கு பலர் பலியாகினர். மாநில அரசும் உயிரிழப்பை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி, நோய் தடுப்பு மருந்து, உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது. நோய் தொற்றிலிருந்து விரைந்து மீள்வதற்கான ஊட்டச்சத்து உணவுகளும் அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. 

இந்தநிலையில் இந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான வன்னியரசு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: கொரானாவை விரட்ட தமிழக அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் பாராட்டுக்குரியது என்றும், முதல்வர் மக்களின் நம்பிக்கையை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் முழுமையாக கொரோனா தொற்றிலிருந்து விலக  அவர்களுக்கு அசைவ சூப்களை கொடுப்பது நல்லது என்று கூறியுள்ளார். 

குறிப்பாக மாட்டிறைச்சி கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றும் தெரிவித்துள்ளார். தான் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டபோது, மாட்டு வால், மாட்டுக்கறி போன்ற உணவையே எடுத்ததாகவும், தற்போது கொரோனா தொற்று விலகியதோடு, முன்பை விட உடல் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாட்டுக்கறியே கொரானாவுக்கான நன் மருந்து என தனது சொந்த அனுபவித்தில் சொல்வதாகவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.