தமிழ்நாடு

மாவட்டங்கள் பிரிப்பால் வந்த பிரச்சனை... நீதிமன்ற பணியாளர்கள் தேர்வில் குழப்பம்... 

உளுந்தூர்பேட்டையில்  இருந்து விழுப்புரத்திற்கு மாவட்டத்திற்கு தேர்வு மையம் மாற்றத்தால் பெரும் பரபரப்பு.

Malaimurasu Seithigal TV
கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும்ஏ. குமாரமங்கலம் அரசு மேல் பள்ளியில் நீதிமன்ற பணியாளர்களுக்கான தட்டச்சு, உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான  தகுதிதேர்வு எழுதுவதற்காக  தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான  மனுவை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக தேர் மையம் அமைந்துள்ளது.
ஆனால் விண்ணப்பம் செய்த அனைவரும்  விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது விண்ணப்பம் செய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஏ.குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் ஆகிய அரசு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு  ஏராளமானோர் தேர்வு எழுத வந்தனர். 
இந்த நிலையில் தேர்வு மையத்தை எந்த விதமான அறிவிப்பி இன்றி விழுப்புரம் பகுதியிக்கு  மாற்றியதால்  தேர்வாளர்கள்  குழப்பமடைந்துள்ளார். தேர்வு எழுதுவதற்காக நீதிபதியே நேராக வந்து உளுந்தூர்பேட்டை பகுதிக்கு தேர்வு எழுத வந்த தேர்வாளர்களை விழுப்புரம் சென்று தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.