தமிழ்நாடு

கரை புரண்டு ஒடிய வெள்ளம்...சிக்கிக்கொண்ட மாணவன்...3மணி நேர போராட்டம் கைகொடுத்ததா?

Tamil Selvi Selvakumar

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்த்தா ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் 3  மணி நேர போராட்டத்திற்கு  பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

கரை புரண்டு ஓடிய வெள்ளம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள் மணிமுக்த்தா அணை, தொடர் மழை காரணமாக நிரம்பியுள்ளது. இதையடுத்து ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்ததால் ஆற்றிலிருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

ஆற்றில் சிக்கிய மாணவன்:

இந்நிலையில் வடபூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லுரி மாணவர் ஒருவர், ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் எதிர்பாரதவிதமாக மணிமுக்தா ஆற்றுப்பகுதியில் சிக்கிக் கொண்டு ஆற்றின் நடுவே உள்ள பாறை கற்கள் மீது நின்றுக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளார். 

3 மணி நேர போராட்டம்:

பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற வரஞ்சரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரும் ஆற்றில் சிக்கி கொண்டு தவித்த மாணவனை 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். 

இந்த சம்பவத்திற்கு காரணம், முன்னறிவிப்பு எதுவுமின்றி மணிமுக்தா ஆற்றின் தண்ணீர் திறக்கப்பட்டதே என்று  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.