தமிழ்நாடு

தீவிரவாத தாக்குதலில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாப்பது? தத்ரூபமாக  நடித்துக் காட்டும் CISF வீரர்கள்!

Tamil Selvi Selvakumar

சென்னை விமான நிலையத்தில் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தீவிரவாத தாக்குதலில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாப்பது என்பதை சி ஐ எஸ் எப் வீரர்கள் தத்ரூபமாக  நடித்துக் காட்டினர்.


சென்னை விமான நிலையத்தில் இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் உரையின்போது திருக்குறளையும் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து சி ஐ எஸ் எப் வீரர்கள் விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டால் எவ்வாறு கையாளுவது என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

மேலும் மோப்ப நாய்களின் செயல்பாடுகள், வெடிகுண்டு இருக்கும் பைகளை லாபகமாக தூக்கி அப்புறப்படுத்தும்  தானியங்கி இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் சிஐஎஃப் வீரர்கள் செயல்முறைப்படுத்தி காட்டினர்.

வீரர்களின் சாகசம், வெடிகுண்டு சத்தம், துப்பாக்கி சத்தம் என விமான நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் களை கட்டியது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சி எஸ் எப் வீரர்களின் சாகச செயல்களை பிரமிப்புடன் பார்த்தனர்.