பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 124வது சர்வதேச மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெலிங்டன் சென்ற அவ்ர், அங்குள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதற்காக வெலிங்டனில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். லெப்டினன்ட் ஜெனரல் மோகன் இயக்கிய காரில் சென்று ராணுவ பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார்.
போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முறைப்படி அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட முக ஸ்டாலின், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். கடந்த 50 ஆண்டுகளில் வெலிங்டன் சென்ற முதல் முதலமைச்சர் முக ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.