சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக 4 புள்ளி 89 ஏக்கர் பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களை கொண்ட 3 கட்டிடங்கள் என சுமார் 240 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆயிரம் படுக்கைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையை வரும் 15-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிக்க : திருச்சி சென்ற முதலமைச்சர்...கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சிறுமி...உறுதியளித்த ஆட்சியர்!
இந்நிலையில், புதிய பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதலமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.