தமிழ்நாடு

வெளிநாடு பயணத்திற்காக புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது என்ன?

Tamil Selvi Selvakumar

புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர்  மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். 


புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையொட்டி, முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  துரைமுருகன்,  டி.ஆர். பாலு, கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பொன்னாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். 

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.