தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என அஞ்சுகிறார் முதலமைச்சர்...!!!

Malaimurasu Seithigal TV

ஆன்-லைன் சூதாட்ட மசோதா ஆளுநர் திரும்ப அனுப்பிய கடிதத்துடன் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தெளிப்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுபான ஊழல்:

மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் வரவேற்று உள்ளது எனவும் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தனியாக கடிதம் எழுதி உள்ளது எனவும் கூறிய அண்ணாமலை டெல்லி மதுபான ஊழல் போல் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என மு.க.ஸ்டாலின் பயப்படுவதாக கூறியுள்ளார்.  

இதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக அமர்ந்து பேசி ஒரு புரிதலுக்கு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேனேஜர் அல்ல:

அண்ணாமலை 38 ஆண்டுகளில் எப்படி இருந்தேனோ அது போல் இருப்பேன் எனவும் அண்ணாமலையை மாற்ற முடியாது எனவும் கூறிய அவர் அதிமுகவினர் என் மீது புகார் கூறினாலும் கவலைப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்களே தவிர மேனேஜர்கள் அல்ல எனவும் தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் எனது பணியும் தலைவராக தான் இருக்கும் எனவும் பேசியுள்ளார்.

வேண்டும் விளக்கம்:

ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஏன் திரும்பி அனுப்பினார் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.  மேலும் பொது தேர்வு எழுதினால் அந்த விடை தாளை பணம் கட்டி நகலை பெறுவதைப் போலவே ஆன்-லைன் சூதாட்ட மசோதாவை ஏன் திருப்பி அனுப்பினார் என்ற கடிதத்துடன் வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  சட்டமன்றத்தில் மீண்டும் கூடி சட்டத்துக்குட்பட்டு மசோதாவை அனுப்ப வேண்டும் எனவும் ஆன்-லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஆளுநர் இல்லை எனவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் அறிவுறுத்தியது போல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.