சென்னை- கன்னியாகுமரி மாவட்டங்களை இணைக்கும் சாலை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சா் ஏ.வ.வேலு தொிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப்யாதவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், முன்னிலை வகித்தனர். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை தரத்தை உயர்த்த அரசு பணியாற்றி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநில நெடுஞ்சொலை 160 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 178 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 471 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ. என்று மொத்தம் 855 கி.மீ. சாலைகள் உள்ளது. கிராமச் சாலைகள் அனைத்தும் தரமான சாலையாக உருவாக்க தமிழக முதல்வர் ஆணைபிறப்பித்து 10 ஆயிரம் கி.மீ. முடிவு செய்து, கடந்த ஆண்டு 2 ஆயிரம் கி.மீ. தூரம் சாலைகள் மாவட்ட ஆட்சியர்; பரிந்துரையில் எடுக்கப்பட்டது.
மேலும், 41 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ. சாலை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராமச்சாலைகளை தரமான சாலையாக அமைக்க முன்னுரிமை அளித்து வருகிறது.
அதோடு, 2021-22 நிதியாண்டில் தரைப்பாலத்தை மேம்பாலமாக்க வேண்டுமென்ற முட்டம்- முடிகண்டநல்லூர் அணுகுசாலை அமைக்க நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பட்டுள்ளது. மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் மேம்பாலம் நில எடுப்பதற்காக தலா 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிலம் எடுக்கும் பணி முடிவடைந்ததும் பணிகள் தொடங்கும். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். சென்னை-கன்னியாகுமரி இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை தமிழக அரசு பொறுப்பேற்று நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க | அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட வலியுறுத்தல் ..! பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!