தமிழ்நாடு

எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி... ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை ...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பபட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க சென்னை மாநகராட்சி சார்பில் காவல் துறை இணைந்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட, பொதுநிகழ்ச்சியான மாநகராட்சி பகுதிகளில் அரசின் தடையை மீறி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். தமிழக அரசின் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51 முதல் 60ன் படியும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 188 உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.