தமிழ்நாடு

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் ரசாயன நுரைகள்... விவசாயிகள் அதிர்ச்சி!!

Malaimurasu Seithigal TV

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ரசாயன நுரைகள் குவியல், குவியலாக பொங்கி வருகிறதா ல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் 7 மதகுகளில் ஷட்டர்கள் மாற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக அணையில் உள்ள நீரை படிப்படியாக குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 1,280 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், அணை பகுதியில் வெள்ளை பனி போர்த்தியது போல ரசாயன நுரைகள் குவியல் குவியலாக செல்கிறது. இதை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கண்டு செல்கின்றனர்.

மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில்  கழிவுகள் திறக்கப்படும் போது தான் இது போன்ற ரசாயன கழிவுநீர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும். ஆனால் தற்போது அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் போதும் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது. மேலும், ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.