தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் இன்று தேரோட்டம்...!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று தேரோட்டம் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஸ்ரீவிருதாம்பாள், பாலாம்பாள் உடனுறை ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் ஆலய மாசிமக திருவிழாவை முன்னிட்டு 9 ஆம் திருவிழாவான இன்று தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதேப்போல்,  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாசித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

இதேப்போன்று கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மகப்பெருந் திருவிழா கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜர் கோயில்களில் ஒன்றான மங்காடு நாகமுட்டம் நாகராஜர் கோயிலில் ஆயில்ய திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து  சிறப்பு வழிபாடு செய்தனர்.