தமிழ்நாடு

நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை, 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

நாகையில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை இலங்கைப் பகுதியில் நிலவி நாளை மறுநாள் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய சென்னை வானிலை மையம், ”தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை” உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.