தமிழ்நாடு

சென்ட்ரலில் வைக்கப்பட்ட ராட்சத மின்விசிறி...!!

Malaimurasu Seithigal TV

கோடை காலத்தில் பயணிகளுக்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இராட்சச மின்விசிறி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  நாள் ஒன்றுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.  கோடை காலம் தொடங்கியுள்ள நாள் முதலே ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் வெப்பத்தால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சாதாரண மின்விசிறி உள்ளதால் பயணிகளுக்கு ஏதுவான காற்று வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பயணிகள் பெரும் அவதிக்கே உள்ளாகி வந்தன. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் சார்பில் பயணிகளின் வசதிக்காக ராட்சச மின்விசிறி வைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்பு அறை முழுவதும் காற்று பரவலாக வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ச்சி நிலவுவதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையின் இரு புறங்களிலும் நான்கு ராட்சசன் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.