தமிழ்நாடு

கார், இரு சக்கர வாகனம், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து...மதுரையில் பரபரப்பு!

Tamil Selvi Selvakumar

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கார், இருசக்கர வாகனம், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் கார் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனங்கள்:

உசிலம்பட்டி அருகே மின் வாரிய அலுவலகம் முன்பு கார், இரு சக்கர வாகனம், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினா் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

இதே போன்று சென்னையை சேர்ந்த 9 பேர் சபரிமலைக்கு வேனில் சென்று விட்டு கடலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எஞ்சினில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் சாலையில் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். பின்னர் வாகனம் முழுமைக்கும் தீ பரவி எரிந்து நாசமானது.விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

இதனிடையே திருத்தணியிலிருந்து சபரிமலை நோக்கி அய்யப்ப பக்தர்கள் வேனில் சென்று கொண்டிருந்தனா். ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிகொண்டு சென்ற வேன் மீது  ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதியது. இந்த விபத்தில், அய்யப்ப பக்தர்கள்  21 போ் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் 9 பேர் காயம் அடைந்தனர்.