தமிழ்நாடு

சட்டசபைக்கு கருப்பு புடவையுடன் வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் வருகை புரிந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடியது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்துக்கொண்டும், கையில் பதாகைகளுடனும் பேரவைக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக நேரம் இல்லா நேரத்தில் தீர்மானமும் கொண்டு வர உள்ளனர். 

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வருகை புரிந்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸார் மத்திய அரசை எதிர்த்து கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்துள்ள நிலையில், பாஜக கட்சியை சேர்ந்தவரே கருப்பு புடவையுடன் பேரவைக்கு வருகை புரிந்ததால் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்ததை பார்த்ததும், " தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்" என புன்னகைத் தபடியே உள்ளே சென்றுள்ளார்.