சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சினிமா இயக்குநர் ராம்குமார் (33). இவர் தற்போது புதுமுக நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். மேலும் இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ராம்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் கடித்ததில், நான் சினிமா இயக்குநராக இருந்து வரும் நிலையில், இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறேன்.
மேலும் படிக்க | சூசகமாக அமைச்சரை சாடும் அன்புமணி ராமதாஸ் - காரணம் என்ன?
இந்நிலையில், சாலை விபத்தில் கணவரை இழந்த மைதிலி எம்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக அவருடன் ஒன்றாக வசித்து வருகிறேன். மைதிலி, இதற்கு முன் திருச்சியில் வாழும் தன் குடும்ப நண்பரான ஜெயராம் பாண்டியன் (பாஜக பிரமுகர்) என்பவருடன் இணைந்து பாஜகவில் பணியாற்றியுள்ளார்.
இணைந்து பணியாற்றியபோது மைதிலியின் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்த ஜெயராம் பாண்டியன், தற்போது அதை காண்பித்து அவரை மிரட்டி வருவதோடு, செல்போன் மூலம் ஆபாசமாகவும் பேசி தொந்தரவு கொடுத்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ். ராஜு பதவி ஏற்பு
இதனையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலிஸார் விசாரிப்பது தெரிந்ததுமே ஜெயராம் பாண்டியன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலிஸார் திருச்சியில் பதுங்கியிருந்த ஜெயராம் பாண்டியனை இன்று கைது செய்தனர்.
பின்னர் ஜெயராம் பாண்டியனிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அந்த விசாரணையில், ஜெயராம் பாண்டியன் மைதிலி மட்டுமன்றி மேலும் பல பெண்களின் ஆபாச புகைப்படத்தை செல்போனில் வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை காண்பிடித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.மேலும் மைதிலியிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டியதும் தெரியவந்ததைத் தொடர்ந்து ஜெயராம் பாண்டியன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.