தமிழ்நாடு

" பாஜக ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை" - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.

Malaimurasu Seithigal TV

பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவையும் இந்தியர்களையும் உலகம் அங்கீகரிக்க தொடங்கி உள்ளது என்றும் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை-மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், 


" 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா வேறு இந்தியாவாக இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பெருமை அடைந்துள்ளார்கள்.‌ ஸ்டாப்-அப் துறையில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து 3-வது நாடாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் முன்னேறி பல்வேறு துறைகளின் தலைவர்களாக உள்ளனர்.‌ உலக அளவில் முக்கிய தலைவராக பிரதமர் உள்ளார்" எனத் தெரிவித்தார். .

" கொரோனா காலக்கட்டத்தில் வளர்ந்த நாடுகள் எல்லாம் இந்தியா இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போகிறது என கேள்வி எழுப்பிய போது, நாம் அனைத்தையும் சமாளித்து கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டோம். ஆனால் குறைந்த மக்கள் தொகை நாடுகளால் கொரோனாவை சமாளிக்க முடியவில்லை" என்று பெருமிதம் கொண்டார். 

அதோடு, " விண்வெளித்துறையில் இந்தியா முன்னேறி வருகிறது என்றும், வளர்ச்சியை 2014-க்கு முன் எப்படி இருந்தது. 2014-க்கு பின் எப்படி இருந்தது என ஒப்பிட்டு பார்த்தால் தான் புரியும்என்றும் கூறினார்.  ஒப்பிடும் பார்த்தால் 2014 க்கு முன் நாடு ஊழலுக்கு பெயர் போனதாக இருந்தது  எனவும்,  மோடி வந்தபின் நாட்டையும் நாட்டு மக்களையும் பெருமையடைய செய்தார் என்றும், அதன்பின்னர், இந்தியர்களை உலகம் அங்கீகரிக்கத் துவங்கியது என்றவர், மற்ற நாடுகளில் இந்தியர்களை தான் பணியமர்த்த விரும்புகிறார்கள் ", என்றார்.   

மேலும், " உலக நாடுகளின் அதிபர்கள் மோடியின் அறிவுரையையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கிறார்கள். உலகை இந்தியா வழி நடத்த விரும்புகிறார்கள்; எங்கு என்ன தேவை என உணர்ந்து அங்கு வளர்ச்சியை கொண்டு வந்தவர் மோடி. அந்த வகையில் தான் நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் திறக்கப்பட்டது", என்று குறிப்பிட்டவர்,  அதனைத்தொடர்ந்து பேசுகையில், " 2014 க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் பயணிகளே இல்லாவிட்டாலும் சுயநலத்தோடு சொந்த நகரங்களுக்கு விமான நிலையம் கிராமங்களுக்கு ரயில் நிலையம் திறக்கப்பட்டது என்றும்,  பா.ஜ.க ஆட்சியில் அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்தார். 

மேலும்,  பா.ஜ க ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுப்பட்டதில்லை எனவும், பல கிராமங்களில் பள்ளிகளில் கழிவறை இல்லாததால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத சூழல் இருந்தது; அந்த நிலை தற்போது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.  " நாடு முழுவதும் பெண்களுக்கு 12 கோடி கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் பழமை வாய்ந்த மொழியாக தமிழ் மொழி இருக்கிறது.‌‌ தமிழர்களின் கலாச்சாரமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நிறுவப்பட்டு இருக்கிறது" ,  என தெரிவித்தார்.