தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு : இருதரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவு!

Tamil Selvi Selvakumar

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், இன்றுடன் வாதங்கள் நிறைவு செய்யப்பட உள்ளன.


செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், நேற்று நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதில் செந்தில் பாலாஜியிடம் ஒருநாளைக்கு ஒரு சில மணி நேரம் மட்டும் விசாரணை நடத்தலாம் எனவும், 15 நாட்களுக்கு மேல் அமலாக்கத்துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமையில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இன்று வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று அமலாக்கத் துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளதால், உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், இன்றுடன் வாதங்கள் நிறைவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.