தமிழ்நாடு

மதுரையில் ரேபிடோ பைக் டாக்சிக்கு தடை... காரணம் என்ன?!!

Malaimurasu Seithigal TV

மதுரையில் ரேபிடோ பைக் டாக்சி இயங்க தடை விதித்துள்ள காவல்துறை, சொந்த வாகனத்தை பைக் டாக்சியாக பயன்படுத்தினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுமதி பெறாமல்:

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரேபிடோ பைக் டாக்சி என்ற தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயங்கியதை கண்டுபிடித்த காவல்துறை, இதுவரை 40க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.

தனிப்படை:

சட்டப்படி அங்கீகாரம் பெறாத ரேபிடோ நிறுவனத்திடம் மொபைல் செயலி வழியாக உறுப்பினர்களாகி இயங்கி வரும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள காவல்துறை, ரேபிடோ பைக் டாக்சி வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு தனிப்படையையும் அமைத்துள்ளது.

பறிமுதல்:

இனி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த நிறுவனத்தின் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்த கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.