தமிழ்நாடு

படுக மொழிக்கான அகராதி வெளியீடு!

Malaimurasu Seithigal TV

கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் மற்றும் நெலிகோலு அறக்கட்டளை சார்பில்  இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு  மாரத்தான் மற்றும் படுக அகராதி (dictionary) வெளியீட்டு விழா நடந்தது. 

இந்த விழாவை  அறக்கட்டளை தலைவர் தருமன் தலைமை வகித்தார். பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் தலைவர் தியாகராஜன் , அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் , காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக திருப்பூர்  ஆர்பிட்டோ ஆசியா ஆய்வகம்  மருத்துவர் தரணி, கோத்தகிரி வெல்கேர் கிளினிக் மருத்துவர் ஸ்வேதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியானது காந்தி மைதானத்தில் தொடங்கி காமராஜர் சதுக்கம் , மார்க்கெட் ,பஸ் நிலையம், கார்சிலி சாலை மிஷின் காம்பவுண்ட், ராம்சந்த் , காந்தி மைதானத்தை வந்து அடைந்தது. இந்த போட்டியானது பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவு, பெண்கள், மூத்தோர் பிரிவு என ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன போட்டியில் முதல் பரிசாக 5000, இரண்டாம் பரிசாக 3000 மூன்றாவது பரிசாக 2000  மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன . இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.