தமிழ்நாடு

குமரி முதல் இமையம் வரை விழிப்புணர்வு பயணம்.. அதுவும் மாட்டு வண்டிலப்பு..!

13 மாநிலங்கள் - 3000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும் பட்டதாரி இளைஞர்

Malaimurasu Seithigal TV

விவசாயி ஆன உதவி இயக்குநர்

விவசாயியத்தை பாதுகாக்க கோரியும் நாட்டு இன மாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் பட்டதாரி இளைஞர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சார்ந்தவர் பட்டதாரி வாலிபர் சந்திர சூரியன். இவர் சென்னையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார், பின்பு தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

அழியும் நாட்டு இன மாடுகள்

இந்நிலையில் குமரியில் இருந்து இமயம் வரை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், அழிந்து வரும் நாட்டு இன மாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறி மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பயணத்தை இன்று கன்னியாகுமரியில் இருந்து துவங்கியுள்ளார்.

3000 கிமீ விழிப்புணர்வு பயணம்

மேலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக 13 மாநிலங்களை கடந்து சுமார் 3000 கிலோ மீட்டர் பயணித்து ஆறு மாதங்களில் தனது பயணத்தை ஹிமாச்சல் பிரதேசத்தில் நிறைவு செய்ய இருக்கிறார். தனது பயணத்தில் பல்வேறு மாநிலங்களில் கிராமங்களில் உள்ள விவசாயிகளை சந்திப்பதாகவும் விவசாயத்தின் அவசியத்தை பொதுமக்களிடம் உணர்த்தும் வகையிலும் தனது  பயணம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.