அரசுப் பள்ளி மாணவர்கள் கலை, கல்வி மற்றும் பகுத்தறிவுடன் வளர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் கலைத்திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். அப்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாணவ - மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர், கலை, கல்வி மற்றும் பகுத்தறிவுடன் மாணவர்கள் வளர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி கல்வித்துறையில் மாணவ - மாணவிகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: தினமும் ஒன்பதாயிரம் அடிகள் நடைப்பயிற்சி.... மாரடைப்பு?!!