தமிழ்நாடு

கலை மக்களுக்கானது : பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு முயற்சி - திருமா

Malaimurasu Seithigal TV

இரும்பன் திரைப்படத்தின் முன்னோட்டம்

 சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் எழுத்தாளர் கீரா இயக்கத்தில் ஜூனியர் எம் ஜி ஆர் நடித்துள்ள இரும்பன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் பார்த்தார்.

சமூக மாற்றத்திற்கான கருத்தியல் படம் இரும்பன் - தொல். திருமாவளவன்

இயக்குனர் கீரா படைப்பில் உருவாகியுள்ள இரும்பன் திரைப்படம் வெளிவர உள்ளது.சமூக மாற்றத்திற்கான கருத்தியல் கொண்ட வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம்.இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

கலை மக்களுக்கானது

திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்குகளுக்கான களமாக மட்டும் பார்க்கக்கூடாது, கலை மக்களுக்கானது எனவே திரைப்படங்களும் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்கிற அடிப்படையில் இப்போது படைப்பாளர்கள் உருவாகி வருவது பாராட்டுக்குரியது

அதேவேளையில் பிற்போக்கான கருத்துக்கள் கொண்ட கதைகளை எழுதும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சாதி அடிப்படையில் ஆணவக் கொலைகளை தூக்கிப் பிடிப்பது போன்ற கருத்தியல் கொண்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்

வேலை வாய்ப்புகள்

இவ்வளவு காலம் ஓபிசி பட்டியலில் இருந்த நரிக்குறவர் இன மக்கள் தற்போது பழங்குடியின பட்டியில் இடம்பெற்று இருக்கிறார்கள் இதன் மூலம்   அவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகள்  அதிகரிக்கும். பாரதிய ஜனதா ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் திரைப்படங்களிலும் ஊடுருவி அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்காக பெரு முயற்சியின் ஈடுபட்டு வருகிறார்கள்

காஷ்மீர் பைல்ஸ் - .பிற்போக்கான கருத்து படம் 

அண்மையில் கூட காஷ்மீர் பைல்ஸ் எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்டனர்.பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு சங்பரிவார் அமைப்புகள் திரைத்துறையை பயன்படுத்த முயற்சிக்கின்றனர் எனவே திரைத்துறையில் உள்ள ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும்

ஜனநாயக சக்திகள் விழிப்புணர்வு வேண்டும் 

தமிழ் திரையுலகம் அண்மைக்காலமாக முற்போக்கான கருத்தியல் கொண்டவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குறியது.பிற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்களும் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர் அதற்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகள் இருக்கிறது இது ஆபத்தான முயற்சி.ஜனநாயக சக்திகள் விழிப்புணர்வோடு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்

அண்மை காலமாக நடிகர் விஜயின் லியோ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர்கள் அதிகம் சூட்டப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்.

..

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி சலுகை அறிவித்து ஊக்கப்படுத்தினார்.தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டுவதை தவிர்த்து தமிழில் பெயர் வைப்பதற்கு படைப்பாளிகள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.