தமிழ்நாடு

இபிஎஸ் பெயரிலேயே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டனவா..?!

Malaimurasu Seithigal TV

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் மொத்தம் 222 பேர் இபிஎஸ்ஸுக்கு  ஆதராவாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல்:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே 'அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்' வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அண்மையில் அறிவித்தது.  அதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பமுள்ளோர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், 20-ந் தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனுகள் மீது பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 21-ந்தேதி மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் 27-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை அறிவித்தது. 

ஆதரவாக..:

இதனைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 222 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், மற்ற அனைத்து மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருமனதாக:

இதனால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.