அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் ஆகத்தான் இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளரை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், "அமைச்சர் தலைக்கு விலை வைப்பது தவறு. ஏற்கனவே இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்தேன். அவர் ஒரு போலி சாமியார். அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுபவர்கள், ஒருவரை கொல்வதற்கு, தலைக்கு விலை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சனாதனம் என்ன என்பது தெரியாமல் சாமியார் பேசியிருக்கிறார்" என பேசியுள்ளார்.
அப்பொழுது, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் பேசியுள்ளார். "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சிக்கலான விஷயம். இந்தியாவில் எதை செய்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி செய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதிகமான வாக்குகள் பெற வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடியுமா நடத்த முடிந்தால் எப்படி நடத்த முடியும் அதற்கான நடைமுறை என்ன, என ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது அந்தக்குழு என்ன அறிக்கை கொடுக்குது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || கொடநாடு வழக்கு: "சிபிசிஐடி-யிடம் அனைத்தையும் தெரிவிக்க போகிறேன்" தனபால் பகீர் தகவல்!!