தமிழ்நாடு

நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்...பாஜக மாநில தலைவர் பேச்சு!

Tamil Selvi Selvakumar

10 சதவீத இடஒதுக்கீட்டால் எந்த பிரிவினருக்கும் பாதிப்பு வராது என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்த வழக்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பலர் பயனடைவார்கள்:

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 10 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், தமிழ்நாட்டில் பலர் பலனடைவார்கள் எனக் கூறினார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக, திமுக போன்ற சில கட்சிகள் விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்க்க வேண்டும்:

இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து விட்டு, அதை நடைமுறைப்படுத்தும் செயலில் திமுக அரசு ஈடுபட வேண்டுமென அப்போது அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் இந்த சிறப்பான தீர்ப்பை, தமிழக பாஜக முழு மனதுடன் வரவேற்பதாகவும் கூறினார்.