தமிழ்நாடு

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிதி யாருடையது? முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Tamil Selvi Selvakumar

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிதி யாருடையது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனும், அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் நோபல் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.

அதேபோல், திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் நோபல் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார். துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.

திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு கேள்வி எழுப்புவதாக கூறியுள்ளார்.