தமிழ்நாடு

தமிழ்நாட்டு மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை!!!!!

Malaimurasu Seithigal TV

பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சியினரின் செயலுக்கு மக்கள் முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் பலர் அரசியலை கண்டு அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

அரசியலிருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள்

கோவை  நவக்கரையில்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்  அண்ணாமலையின்  முன்னிலையில் விவசாயிகள் உள்ளிட்ட   ஏராளமானோர்   பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை,தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறும் 
அரசியலை தமிழக மக்கள் ஏற்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டதாக குறிப்பிட்ட அவர்
6 மாதம் கழித்து நடைபெறும்  நேர்மையாக நடக்கும் என்பதில் என்ன உத்தரவாதம் என தெரிவித்தார். தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சார்பாக 430 வழக்குகள் போடப்பட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை மேலும் அதனை தொடர்ந்து செலவு கணக்குகளையும் கூறினார்.

பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா?

ஒரு தேர்தலுக்கு 45 கோடி சாதாரணமாக செலவாகிறது என்றும், ஆனால் ஆளுங்கட்சிக்கு 250 கோடி வரை செலவாகிறது என்றும் விமர்சித்தார். அரவக்குறிச்சி தேர்தல் போல்  ஈரோடு கிழக்கு தொகுதியும் மாறிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர்
பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா? அதற்கு விவசாயம் செய்துவிட்டு போய்விடலாம் என கிண்டல் அடித்தார். பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சியினரின் செயலுக்கு மக்கள் முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் பலர் அரசியலை கண்டு அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.