தமிழ்நாடு

சூசகமாக அமைச்சரை சாடும் அன்புமணி ராமதாஸ் - காரணம் என்ன?

Malaimurasu Seithigal TV

நிலத்திற்கு இழப்பீடாக எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அது "முருகன் பெருமாள்" பெயர் கொண்டவர் துறைக்கு சென்று விடும் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் டாஸ்மாக்கை சூசகமாக குறிப்பிட்டு பேசிய அன்புமணி ராமதாஸ்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையப்படுத்துதல் தொடர்பாக தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட முக்கிய சிக்கல்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், அரசு மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் அதன் அதிகாரிகள் நெய்வேலி, புவனகிரி, பண்ருட்டி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களோடு அழைப்பு விடுக்காத போதும் அன்புமணி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை. ஆனாலும் மக்கள் பிரதிநிதியாக தானாக முன்வந்து நான் கலந்து கொண்டேன். என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவை இல்லை என கருத்தை பதிவு செய்தேன்.

மூன்று தலைமுறையாக அந்த பகுதி மக்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட உடல் சம்பந்தமான பிரச்சனைகளை எல்எல்சியால் உருவகி இருக்கிறது.நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என தொடர்ந்து பாமக போராட்டங்களை, பொதுக் கூட்டங்களை, இரண்டு நாள் நடை பயணத்தை, ஒரு நாள் முழு கடையடைப்பை நடத்தினோம்.என்எல்சி வேண்டாம் என 300 கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் போடப்பட்டது.என்எல்சி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் உறுதி கொடுக்க வேண்டும்.விவசாயிகளின், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நிலத்தை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த வருகின்றனர். இதற்கு பாமக ஒருபோதும் அனுமதி அளிக்காது.

சட்டத்திற்கு எதிராக அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. என்எல்சியின் ஆறு நிலக்கரி சுரங்க திட்டங்கள் அமலுக்கு வராது என உறுதி வேண்டும்.தனியாருக்கு விற்கப்பட உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்கு நிலத்தை கையகப்படுத்த அரசு ஏன் துடித்துக் கொண்டிருக்கிறது?கடலூர் மாவட்டத்திற்கு ஒரு பிரச்சனை என ஓராண்டு காலமாக நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே பிரச்சனை தஞ்சாவூர் மாவட்டத்தில் எழுந்த போது ஒரே நாளில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தனர். ஏன் கடலூர் மாவட்டத்தை கண்டு கொள்ளவில்லை?என்எல்சிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை முருகன் - பெருமாள் பெயரைக் கொண்ட அமைச்சரின் துறைக்கு தான் செல்லும்.

தமிழ்நாடு அரசு போதுமான மின்சாரம் தயாரித்து வரக்கூடிய நிலையில் உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாறிவரும் நிலையில் என்எல்சி தேவை இல்லைஎன்எல்சி விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தது நாங்கள் தான். ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கவில்லை.இவ்வளவு நிலங்களை அழித்து, சுற்றுச்சூழல் மாசோடு ஆயிரம் மெஹாவாட் மின்சாரம் கொடுக்கும் என்எல்சி திட்டம் தேவையில்லை.கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு அமைச்சர்கள் தான் நிலத்தை கைப்பற்றி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர்.வேளாண்துறை அமைச்சர் ஆக இருக்கக்கூடிய தனது சொந்த மாவட்ட விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும்230க்குள் தமிழ்நாட்டின் 50 வழக்காடு புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தயாரிப்போம் என்கின்றனர் நிலத்துக்கு முதலாளியாக இருக்கும் நான் நிலத்தை என்எல்சியிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கூலி வேலைக்கு கைகட்டி கொண்டு வேலை பார்க்க முடியுமா?", என்றார்