கடலூர் மாவட்டம் நெய்வேலியை சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விவசாயிகள்,பொது நல அமைப்பினர் ,வணிகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு கிராம மக்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து நிலையில், கடந்த சில நாட்களாக எந்தவித பணியிலும் என்எல்சி நிர்வாகம் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் இன்று என்எல்சி நிலங்களை கையகப்படுத்த எதிர்பபு தெரிவித்து நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை தடுத்தல், நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க செய்தல் குறித்து விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், வணிகர் அமைப்புகள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி அமைப்புகளுடன் ஆலோசனை கருத்து கேட்பு கூட்டம் நெய்வேலி இந்திரா நகரில் பாமக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் துவங்கியது.
இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, மற்றும் வணிகர் சங்கம் நிர்வாகிள்,பொது நல அமைப்பினர் உட்பட 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: டி.எம்.சௌந்தரராஜன் சிலை வைக்க கோரிக்கை....!!