தமிழ்நாடு

சபாநாயகர் கேள்விக்கு சமாளித்த வானதி...சட்டப்பேரவையில் நிகழ்ந்த சுவாரசியம்...!

Tamil Selvi Selvakumar

சட்டசபைக்கு கருப்பு புடவை அணிந்து வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், "தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்" என புன்னகைத்த படி உள்ளே சென்ற சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்  கருப்பு ஆடை அணிந்து, சட்டப்பேரவைக்கு வந்தனர். இதனிடையே சட்டப்பேரவைக்கு வந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எதார்த்தமாக கருப்பு சேலையில் வர, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, "என்ன மேடம் நீங்களும் கருப்பு சேலை" என்று கேட்க,   "தெரியாமல் கருப்பு புடவை  அணிந்து வந்துவிட்டேன்" என்று கூறி தலையில் அடித்துக் கொள்ள இருவரும் சிரித்தபடி உள்ளே சென்றார். 

இதனைத்தொடர்ந்து, கருப்பு புடவை குறித்து சபாநாயகர், நீங்களும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போன்று யூனிபார்மில்  வந்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்ப, அதற்கு "எமர்ஜென்சியின்போது, ஆளுங்கட்சித் தலைவர்கள் சிரமப்பட்டதை நினைவூட்டும் வகையில் கருப்பு புடவை அணிந்து வந்ததாக சமாளித்து பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.