தமிழ்நாடு

ஒகேனக்கலில் நீரின் அளவு 13,000 கன அடியாக உயர்வு...ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்!

Tamil Selvi Selvakumar

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 13ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 14ஆயிரத்து 136 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த நீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது.

இதன்மூலம் ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை அது 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.