நியூசிலாந்தில் நடந்து முடிந்த, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பவர் லிப்டிங் போட்டியில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த அமுத சுகந்தி ஐந்து தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி :
நியூசிலாந்து நாட்டின்,ஆக்லாந்து நகரில் காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 27ல் துவங்கி,இம்மாதம் 4ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேரந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.தமிழ்நாடு பவர் லிப்டிங் சங்கம் சார்பில்,சென்னையைச் சேர்ந்த வீராங்கனை அமுத சுகந்தி உட்பட 13 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.குறிப்பாக, வலுத்தூக்கும் போட்டியில் அமுத சுகந்தி பங்கேற்று நான்கு முறை 'ஸ்டாங்உமன்" என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
அமுத சுகந்திக்கு அமோக வரவேற்பு :
இந்நிலையில் வீராங்கனை அமுத சுகந்தி பவர் லிப்டிங் போட்டியில் வென்று ஐந்து தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்று இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அமுத சுகந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாஜக சார்பில் மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் அமுத சுகந்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமுத சுகந்தியின் நன்றி :
செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை அமுத சுகந்தி கூறியது,நாங்கள் தமிழகத்திலிருந்து மொத்தம் 15 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டோம், எல்லோரும் மெடல் வென்றுள்ளோம், நான் பவர் லிப்டிங் போட்டியில் வெல்ல எனக்கு உதவியாக இருந்த தமிழ்நாடு பவர் லிப்டிங் தலைவர் ராஜாஅவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நான் ஐந்து தங்க மெடல், ஒரு வெள்ளி மடல் வென்றுள்ளேன்,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.15 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நியூஸிலாந்து ,சவுத் ஆப்பிரிக்கா உடன் விளையாடிய போது எனக்கு சிறிது கடினமாக இருந்தது.நான் வெற்றி பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன்.மேலும் இந்தத் துறையில் பெண்கள் குறைவாக இருப்பதால் ,பெண்கள் இந்தத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.எனது இந்த வெற்றிக்கு துணையாக இருந்த என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன் கூறியது :
காமன்வெல்த்தில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்ற அமுத சுகந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனையை படைத்து பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் . பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும், கட்சி நிர்வாகிகள் சார்பாகவும் வீராங்கனை அமுத சுகந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் புகழாரம் சூட்டியுள்ளார்.