தமிழ்நாடு

ஆடம்பர திருவிழாவாக இல்லாவிட்டாலும்...மரபுகளை நினைவூட்ட வேண்டும்...திருச்சி சிவா பேச்சு!

Tamil Selvi Selvakumar

தமிழர் திருநாள் ஆடம்பர திருவிழாவாக இல்லாவிட்டாலும், மரபுகளை நினைவூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா இசை சங்கமம் :

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழாவின் இசை சங்கமத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. பின்னர் திருச்சி சிவா மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

திருச்சி சிவா மேடைப்பேச்சு :

பின்னர் மேடையில் பேசிய திருச்சி சிவா, தனக்கென்று தனியான மரபுகளை படைத்து அதனை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாள் இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் எல்லா திசைகளிலும் எல்லா தெருமுனைகளிலும் தமிழரின் புகழ் ஓங்க வேண்டும் என்றும், தமிழர் திருநாள் ஆடம்பர திருவிழாவாக இல்லாவிட்டாலும், மரபுகளை நினைவூட்டும் வகையில் இருக்க வேண்டும். அதன்படி, 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கலைகளை கொண்டாடும் விதமாக பொங்கல் இருந்தாலும், நம் மரபுகளை போற்றும் படியாகவும், வளரும் தலைமுறைக்கு நம்முடைய கலைகளை சொல்லி தர வேண்டும் எனவும் திருச்சி சிவா கூறியுள்ளார்.