அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட ஆயிரத்து 78 பேருந்துகள் உள்ளன. 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : கேரளாவில் பரபரப்பு...திடீரென சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு...பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!
இதில், ஏற்கெனவே பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த இருக்கைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும் என்று சமீபத்தில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அதன்படி, அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.