தமிழ்நாடு

24 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழா...திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!

Tamil Selvi Selvakumar

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் ராமதீஸ்வரா் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பின்னா் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா்.  

கண்டாச்சிபுரம்  மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள ராமநாதீஸ்வரர் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பின்னா் மகா குடமுழுக்கு விழா வெகு விமா்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் அமைந்துள்ள அருண ஜடேஸ்வரர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமா்சையாக நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு எஜமான சங்கல்பம், அனுக்ஞை பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா விமா்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனா்.