தமிழ்நாடு

சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தொடர்...சபாநாயகர் வாசித்தது என்ன?

Tamil Selvi Selvakumar

நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

முதல் நாள் கூட்டத்தொடர்:

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது பெரியார், அம்பேத்கர், திராவிட மாடல், சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்த ஆர்என் ரவிக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து ஆளுநரின் செயலுக்கு அவையிலேயே முதலமைச்சர் கண்டித்த நிலையில், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார்.

2ஆம் நாள் கூட்டத்தொடர்:

தொடர்ந்து இரண்டாம் நாள் கூட்டம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது. அப்போது அ.சின்னசாமி, தில்லை காந்தி என்கிற கோ.ஆதிமூலம், துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் ஆகியோருக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். அதனைத்தொடர்ந்து, கால்பந்து வீரர் பீலே, திருமகன் ஈ.வெ.ரா, டி.மஸ்தான், க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், அவ்வை நடராசன், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடந்து அவை நடவடிக்கைகள் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.