தமிழ்நாடு

இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்

Malaimurasu Seithigal TV

நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும்போதெல்லாம் அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார் மனோ. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபி தெலுங்கில் டப்பிங் பேச, சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார்.

பாடலாசிரியர் மனோ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கார வேலன் உள்ளிட்ட சில படங்களில் மனோ நடித்திருக்கிறார். கடைசியாக சிவா நடிப்பில் வெளியான சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் எனும் படத்தில் நடித்திருந்தார்.

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின்போது அளித்த பேட்டியில் மனோ பேசியதாவது, ''நீங்கள் நடிக்கச் சென்றால் உங்களுக்காக பாடல் காத்திருக்காது என்று இளையராஜா கூறினார். ஏனென்றால் சிங்காரவேலன் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் பாடி கொடுத்தேன். அப்போதுதான் இளையராஜா இதனை தெரிவித்தார். அது மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக் கொண்டேன் என்று பேசினார்.

இசைத் துறையில் புரிந்த சாதனைக்காக பாடகர் மனோவுக்கு ரிச்மண்ட் கேப்ரியல் யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவவித்திருக்கிறது.